psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

நரசிம்மனே ! நாராயணா !

🕉️ ஸ்ரீ நரசிம்மர்
Originals

🎵 Watch/Listen on YouTube


narasimha

தூண் பிளந்து வந்த நரசிம்மனே  ! நாராயணா !
வான் அளந்து நின்ற வாமனனே ! நாராயணா !

கேசவா ! மாதவா ! கோவிந்தனே !
ஜெய ஜெய ஜெய ஜெய நரசிம்மனே !

(தூண் பிளந்து)

சர்வம் நாரணன் ரூபமே !
சொன்னான் பக்த ப்ரகலாதன் !
தரணியே அறிந்த சத்தியத்தை…
இரணியன் இறுதியில் உணர்ந்தானே !

எதிலும் நீயே நரசிம்மா !
என்பதை நாங்கள் அறிவோமே !

எமக்கோர் தரிசனம் தருவாயா?
கடைக்கண்ணாலே அருள்வாயா?

(தூண் பிளந்து)

சுவாதியில் தோன்றிய ஜோதியே !
அந்தமே இலாத..ஆ….தியே !
துங்கையின் கரையில் உறைவோனே !
ம்ங்கலம் சேர்த்திடும் மாதவனே !

எதிலும் நீயே நரசிம்மா !
என்பதை நாங்கள் அறிவோமே !

எமக்கோர் தரிசனம் தருவாயா?
கடைக்கண்ணாலே அருள்வாயா?

(தூண் பிளந்து)