psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ப்ரத்யங்கரா தேவியே !

🕉️ அம்மன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா
Originals

🎵 Watch/Listen on YouTube


வெற்றிகளைத் தந்தருளும்
சக்தி வடிவானவளே ! ப்ரத்யங்கரா தேவியே ! (2)
பற்றி உன் பாதத்தை
பணிந்திடுவோம் அனுதினமும் ப்ரத்யங்கரா தேவியே ! (2)

கோரஸ்:
ப்ரத்யட்ச தெய்வம் துணை !
ப்ரத்யங்கரா துணை ! (2)

சரணம் 1
————–
 வெற்றிதர பாண்டவர்க்கு
சுயம்புவென வந்தாயே நீ ஐவர்பாடியதிலே !
கொட்டுகிற வடமிளகாய் அக்கினியில் கமறலின்றி
உள்வாங்கிடும் தேவியே !
ஆலிலையில் அர்ச்சனைகள்
செய்வதினால் அகமகிழும்
அகிலாண்ட தேவி நீயே ! (2)

கோரஸ்:
ப்ரத்யட்ச தெய்வம் துணை !
ப்ரத்யங்கிராவே துணை ! (2)

சரணம் 2
—————
வங்கக் கடல் கரையருகில் மங்கலங்கள் தந்தருள்வாய்
சோளிங்க நல்லூரிலே !(2)
தாங்கும்திரு உளம்கொண்டு தயவுகள் செய்கின்ற‌
காருண்ய கடலலையளே !(2)
திக்கில்லை என்றுந்துன் சன்னதியில் நின்றோர்க்கு
‘முட்டிறக்கல்’ எனும் பூஜையில்…
வாஞ்சையினைக் காட்டு வாயே !(2)