psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

பரணி தீபம் பாருங்கள் !

🕉️ சிவபெருமான்
Originals

🎵 Watch/Listen on YouTube


பரணி தீபம் பாருங்கள் ! அருணை மலையிலே ! – இந்த
தரணி ஆளும் ஈசன் வாழும் அண்ணாமலையிலே…
கோரஸ்: திரு அண்ணாமலையிலே ! திரு அண்ணாமலையிலே ! (2)

சரணம் – 1
——–
அதிகாலை கருவறையில் தீபம் ஒன்று ஏற்றுவார் !
அதிலிருந்து ஐந்தாக தீபம் ஏற்றுவார் ! (2)
ஏகன் அநேகனாகும் தத்துவம் சொல்லி (2) பஞ்ச
பூதங்களும் அவனடக்கம் என்பதைக் காட்டும்…
( பரணி)

சரணம். 2

அக இருளை அகற்றிடுமே அகல் விளக்கு தீபமே !
அதிலழியும் சாம்பலாகி செய்த பாவமே ! (2)
மாலை மலை உச்சியிலே மகா தீபமாய் (2) – அந்த
மகாதேவன் தெரிந்திடுவான் ஜோதி ரூபமாய்…
(பரணி)