சஷ்டி என்றால் ஆறு

“சஷ்டி” என்றால் ஆறு ! – அதன்
இஷ்ட தெய்வம் யாரு? (2)
கந்தன் வடிவேலன்….செந்தூர்
செந்தில் குகநாதன்…! (2)
சரணம்-
—————
ஈசனவன் கண் உதித்த தீப்பொறிகள் ஆறு !
வீசிச் சென்று தெறித்த இடம் தாமரைப்பூ ஆறு ! (2)
தாமரையில் பாலன் என பூத்தமுகம் ஆறு ! (2)
பாசமுடன் சேர்த்தெடுத்த கார்த்திகையர் ஆறு !
கந்தன் வடிவேலன்….செந்தூர்செந்தில் குகநாதன்…! (2)
சரணம்
————-
பன்னிரெண்டு கைகளுடன் மேனி..முகம் ஆறு !
சூரன் தலை எடுக்க வந்த வீரனிவன் பாரு ! (2)
போர் தொடங்கி முடிந்த அந்த நாளதுவும் ஆறு ! (2)
பார் புகழ வென்றவனாம் வேலன் என்னும் பேரு ! (2)
கந்தன் வடிவேலன்….செந்தூர்
செந்தில் குகநாதன்…! (2)