psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

கல் கருடன் – சிறப்பு பாடல்

🕉️ கருடன்
Originals

🎵 Watch/Listen on YouTube


கல் கருடன் ! அவன் கருணா சாகரன் !
புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2)
உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2)
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
(கல் கருடன்)
சரணம் – 1
———————–
உச்சி கால நைவேத்யம்பட்சியாகி  ஏற்றிடுவான் !
சத்யம் என வந்தவரை…நிச்சயமாய்க் காத்திருப்பான் ! (2)

தாங்கிடுவேன் கையிலெனும்…ஆ…..
தாங்கிடுவேன் கையிலெனும். கோலத்திலே தானிருப்பான் ! (2)
பாங்குடனே பணிந்தவற்குத் பக்கதுணை யாயிருப்பான் ! (2)
(கல் கருடன்)

சரணம் – 2
———————-
ஆடிமாத  பஞ்சமியின் அவதரித்த அருட்செல்வன்
அடிபணிந்து அவன்வணங்கும் ஆசான் திருமாலன் ! (2)
அஷ்ட நாகம் அணிகலனாய் ஆ…..
அஷ்ட நாகம் அணிகலனாய் பூணும் வேத ரூபன் அவன் ! (2)
இஷ்டமுடன் வேண்டுவோர்க்கு அருளுகின்ற நாதன் அவன் ! (2)
(கல் கருடன்)