psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

அம்மனுக்கு வளைகாப்பு

🕉️ அம்பாள் / தேவி
Originals

🎵 Watch/Listen on YouTube


ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு !
அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு ! (2)

வளையல்களை சார்த்திடுவோம் அம்மனுக்கு !
வளங்கள் எல்லாம் சேர்த்திடுவாள் அவள் நமக்கு ! (2)
(ஆடிப்பூர)

சரணம் – 1
————–
செந்நிறத்து உடை விரும்பும் அம்மனுக்கு சிவப்பு வளை !
செந்நிறத்து உடை விரும்பும்
அம்மனுக்கு சிவப்பு வளை !
பொன்னிறத்து கரங்களுக்கு பளபளக்கும் பச்சை வளை ! (2)

வண்ண வண்ண வளையல்களில் அன்னையும் மின்ன…(2)
இன்னும் கொஞ்சம் கண்கள் வேண்டும் அழகினைக் காண (2)

வளையல்களை சார்த்திடுவோம் அம்மனுக்கு !
வளங்கள் எல்லாம் சேர்த்திடுவாள் அவ நமக்கு ! (2)

(ஆடிப்பூர)

சரணம் – 2
—————-
வேலெடுத்துத் தந்தவளை…வேண்டியதைத் தருபவளை…

வேலெடுத்துத் தந்தவளை…
வேண்டியதைத் தருபவளை…

சூலம் கையில் கொண்டவளை…சூட்சுமங்கள் அறிந்தவளை…(2)

வணங்கிடுவோம் மனமுருகி பக்தியினோடு…! (2)
வளையல்போல வண்ணம் வரும் வாழ்வதனோடு…! (2)

வளையல்களை சார்த்திடுவோம் அம்மனுக்கு !
வளங்கள் எல்லாம் சேர்த்திடுவாள் அவ நமக்கு ! (2)

(ஆடிப்பூர)