லோகமாதா காமாட்சி

லோகமாதா காமாட்சி எல்லாத்தையும் பாத்துக்குவா !”
ஸ்லோகம் போலே சொன்னாரே காமகோடி பெரியவா !
லோக க்ஷேமமே சிந்தனையாய் வாழ்ந்து வந்தார் அல்லவா?
கோலம் கொண்டு மனிதனாக மண்ணில் வந்த ஹர சிவா !
(லோகமாதா)
தேவி அருளில் திளைத்தவர் ! தெய்வத்தின் குரலாய் ஒலித்தவர் !
வேத சாஸ்த்ரம் செழிக்கவே..வேள்வி பலவாய் செய்தவர் !
காவி உடையில் நமையெலாம் காவல் செய்ய வந்தவர் !
காவியம், கதைகள் உணர்த்திடும் கருத்தை அறியவைத்தவர் !
(லோகமாதா)
அத்வைத தேரின் சாரதி ! அருளைப் பொழியும் வாரிதி !
ஆதி சங்கரர் அவர்வழி…அதிலே நடந்த திருவடி !
கால் நடையில் தேசமெலாம் வலமாய் வந்த மாமுனி !
தாள் பணிந்து வணங்குவோம் குருவில் அவரே மாமணி !
(லோகமாதா)