psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

நாமக்கல் நரசிம்மா !

🕉️ விஷ்ணு / திருமால் ஸ்ரீ நரசிம்மர்
Originals

🎵 Watch/Listen on YouTube


narasimmar

நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி
நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2)
(ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…!  (2) – இந்த‌
நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது !

கோரஸ்:ஓம் நமோ நாரணா கோவிந்தா !
ஓம் நமோ நாரணா கோபாலா ! (2)
(நாமக்கல்)
சரணம் – 1
——————-
திருமகளின் மனம் மகிழக் காட்சி தந்தவன் ! – அவள்
திருவுருவை மார்பினிலே ஏந்திக் கொண்டவன் ! (2)

பெருமை மிகு ஆஞ்சனேயன் தொழுத நாரணன்  !
அருள் பொழியும் அன்பு முகில் ஆன மாதவன் ! (2)

கோரஸ்:ஓம் நமோ நாரணா கோவிந்தா !
ஓம் நமோ நாரணா கோபாலா ! (2)
(நாமக்கல்)

சரணம் – 2
——————-
பரம்பொருளே யாதுமென‌ உணரச் செய்தவன் ! – நல்ல‌
வரமருளும் வரப்ரசாதி யாக வந்தவன்…!  (2)
கரம் குவித்து வேண்டுவோரைக் காத்து நிற்பவன் !
நலமருளும் நாமகிரித் தாயின் நாயகன் ! (2)

கோரஸ்:ஓம் நமோ நாரணா கோவிந்தா !
ஓம் நமோ நாரணா கோபாலா ! (2)
(நாமக்கல்)