நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு

நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு கோயிலுதான் !
நான்வணங்கும் தெய்வமுன்னா தேவிகருமாரிய(ள்) தான்!
வேற ஒண்ணும் எனக்குத் தெரியல…- அந்தத்
தாயிக்கிணை யாரு ஊருல…!
(நானறிஞ்ச)
நானெதுவும் கேட்டதில்லை…தாயிருக்கா பாத்துக்குவா !
தன்னாலே தந்திடுவா ! தருவதெல்லாம் மங்கலந்தான் ! (2)
நெஞ்சுக்குள்ள முப்பொழுதும் அவபாட்டு சுத்திவரும் !
அச்சமில்லை எப்பொழுதும் ! நீலி நிழல் கூடவரும் ! (2)
வேற ஒண்ணும் எனக்குத் தெரியல…- அந்தத்
தாயிக்கிணை யாரு ஊருல…!
மாரியென வந்திடுவா ! குடையாக நின்றிடுவா !
வெயில் வரும் நேரத்தில…வேப்பநிழல் ஆயிடுவா ! (2)
வாரிவாரித் தந்திடுவா ! வள்ளலெனத் தந்திடுவா !
வந்ததென்ன போனதென்ன…தேவிஅவ செஞ்சதுதான் !
வேற ஒண்ணும் எனக்குத் தெரியல…- அந்தத்
தாயிக்கிணை யாரு ஊருல…!