அனுமனின் பலம்

Ragam: Revathy
அனுமனின் பலமே வால் தானே ! – அதை
அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2)
அருள் மழை பொழியும் நிஜந் தானே !
அற்புத மாகிடும் நலம் தானே ! (2)
அனுமனின் பலமே வால் தானே ! – அதை
அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2)
***
இராவணன் அவனுக்கு இணையாக
ஆசனம் செய்ததும் வால்தானே !
ஆணவம் கொண்டவர் தீமூட்ட..
இலங்கையை அதனால் எரித்தானே !
இராவணன் அவனுக்கு இணையாக
ஆசனம் செய்ததும் வால்தானே !
ஆணவம் கொண்டவர் தீமூட்ட..
இலங்கையை அதனால் எரித்தானே !
இலங்கையை அதனால் எரித்தானே !
அனுமனின் பலமே வால் தானே ! – அதை
அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2)
***
பாதையில் நெடிதாய் நீண்டிருந்த
வாலினை நகர்த்திட முடியாமல்
பீமனும் முயன்று தோற்றானே !
பணிவுடன் பூஜை செய்தானே !
பாதையில் நெடிதாய் நீண்டிருந்த
வாலினை நகர்த்திட முடியாமல்
பீமனும் முயன்றே தோற்றானே !
பணிவுடன் பூஜை செய்தானே !
பணிவுடன் பூஜை செய்தானே !
அனுமனின் பலமே வால் தானே ! – அதை
அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2)
***
அடியினில் தொடங்கி நுனிவரையில்
வாலினில் சந்தனம் குங்குமமும்
பக்தியாய் வைப்போம் நாள்தோறும்…
பார்வதி சிவனின் அருள்சேரும் !
அடியினில் தொடங்கி நுனிவரையில்
வாலினில் சந்தனம் குங்குமமும்
பக்தியாய் வைப்போம் நாள்தோறும்…
பார்வதி சிவனின் அருள்சேரும் !
பார்வதி சிவனின் அருள்சேரும் !
அனுமனின் பலமே வால் தானே ! – அதை
அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2)