மஹா ப்ரதோஷம்

சனிவாரம் வரும் ப்ரதோஷம்..! – அது
மிக விசேஷம்…மஹா ப்ரதோஷம் ! (2)
சரணம் – 1
நஞ்சினை உண்டு சிவன் நீலகண்டன் ஆனதும்
நந்தியின் கொம்பினிடை நடனம் செய்ததும் (2)
அஞ்சிய அண்டத்தினை அரணாய்க் காத்ததும்… (2)
அற்புத அருள்நிறையும் இந்நாளே ! (2)
ஓம் நம:சிவாய…சிவாய ஓம்..
ஓம் நம:சிவாய…சிவாய ஓம்..
சரணம் – 2
சிவபெருமானுடனே சனி பகவானும்…
பவபயம் தீர்த்தருளும் புண்ணியத் திருநாளாம் ! (2)
பலநாள் ப்ரதோஷத்தின் பூஜை பலன்களை…(2)
ஒருநாளில் தரும் திருநாளே ! (2)
ஓம் நம:சிவாய…சிவாய ஓம்..
ஓம் நம:சிவாய…சிவாய ஓம்..