மரத்தடியும் ஆலயம் !

பாடலை <a href=”https://youtu.be/s43Ila85JrM” target=”_blank”>YOUTUBE-ல் </a>கேட்க…
மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !
பேதம் செய்து பார்ப்பதில்லை எங்கள் விநாயகன் !
வேதமெலாம் போற்றுகின்ற வெற்றி விநாயகன் !
சித்தி விநாயகன் ! வரசித்தி விநாயகன் !
சக்தி விநாயகன் ! சிவசக்தி விநாயகன் !
(மரத்தடியும் ஆலயம் )
விபத்திரன் எனும் வேடனவன் வேண்டுதலை
சுபம் தரும் அந்த கணபதியும் ஏற்றருளி…
அவனுக்கொரு குருவாகி ஞானம் தந்தான் ! – அந்த
வேடனுக்கு ஞான உபதேசம் தந்தான் !
சித்தி விநாயகன் ! வரசித்தி விநாயகன் !
சக்தி விநாயகன் ! சிவசக்தி விநாயகன் !
(மரத்தடியும்)
கார்த்தவீர்யன் எனுமரசன் மகிமைமிகு
ஸ்ரீகணேச மந்திரத்தின் பலனடைந்தான் !
ஆயிரத்துக் கரங்களிலும் வலிமை கொண்டான் ! – அவன்
ஆயுளுக்கும் கணபதியின் பதம் பணிந்தான் !
சித்தி விநாயகன் ! வரசித்தி விநாயகன் !
சக்தி விநாயகன் ! சிவசக்தி விநாயகன் !
(மரத்தடியும்)
கிருஷ்ணைநதி வடகரையில் வனத்தினிலே
திருமுருகனும் கணபதியை வழிபடவே…
கோல மயில் வாகனமாய் தான் அடைந்தான் ! – இன்னும்
கூட பல வரங்களையும் வாங்கிக் கொண்டான் !
சித்தி விநாயகன் ! வரசித்தி விநாயகன் !
சக்தி விநாயகன் ! சிவசக்தி விநாயகன் !
(மரத்தடியும்)