முருகன்

வைகாசி விசாகம்

Youtube link கந்தன் பிறந்த வி சாகம் ! – விசேஷம் ! அந்த சிறப்புகள் பாடிடும் கானம் ! பாசுபதம் எனுமாயுதம் பார்த்தன்சிவ பெருமானிடம் பெற்றதும் இந்த நாளே ! – அது வெற்றியின் வரலாறே ! ஈசன் மழுவினை ஏந்தி – திருநடனம் மழபாடியில் புரிந்த துஇந்நாளே ! ஹரி நாராயணன் துதிபாடிய ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்ததும் இந்த நாளே ! – இந்த விசாகத் திரு நாளே ! புத்தர் பிறந்ததும் இந்நாளே ! திருநாளே ! அவர் ஞானம் அடைந்ததும் இந்நாளே ! – திரு ஞானம் பெற்றதும் இந்நாளே ! சத்ய
தைப்பூசம் சிறப்புகள் - பாடல் வடிவில்...

பௌர்ணமி தைமாசம்… சேர்ந்துவரும் தைப்பூசம் ! ரொம்ப விசேஷம் ! அது ரொம்ப விசேஷம் ! அத பாட்டுலதான் சொல்லவந்தேன்… கேட்டுபுட்டு லைக்கு போட்டா ஆகிடுவேனே நானும் ரொம்ப சந்தோசம் ! சிவனார் உலகத்தை படைச்சநாளும் பூசம்தான் ! தைப்பூசம் தான் ! அது தைப்பூசம் தான் ! வ்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவருக்கு அம்மையோடு நடராஜர் ஆடியதும் தைப்பூசம் தான் ! முப்புரம் எரிச்சாரே முக்கண்ணால் பரமேசன்! தைப்பூசம் தான் ! அன்றும் தைப்பூசம் தான் ! வடலூரு வள்ளலாரு சோதியாடு ஐக்கியமா ஆன அந்த நாளதுவும் தைப்பூசம் தான் ! இரணிய வர்மனுக்கு ஈசன் தந்த தரிசனமும்
சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே ! வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக் கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !
ஆறுபடை

பாடலை பார்க்க/கேட்க‌<— கடலோரக் கோயிலில‌ திருக் கோயிலில‌ கடம்பனப் பாரு ! (2) அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் ! அழகான திருக் காட்சிதான் ! செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் ! ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2) திருத்தணிகை மலையினில‌ அந்த மலையினில‌ முருகனைப் பாரு ! (2) பகை தணியும் கோயிலாம் ! பிணி தணியும் கோயிலாம் ! பல்லாண்டு பழங் கோயிலாம் ! குற வள்ளி தேவிய ! குமேரேசன் சாமியும் மணம் செஞ்ச திருக் கோயிலாம் ! (2) அப்பனுக்கே பாடம் சொன்ன ஒரு பாடம் சொன்ன‌ சுப்பன பாரு
வேலைப் பணிவதேநம் வேலை

பாடலை பார்க்க/கேட்க‌<— வேல், மயில், சேவல், ஓம் ——————————————- வேலைப் பணிவதேநம் வேலை ! – தினம் வேண்டிடுவோம் மூ வேளை ! (2) ஆறுதல் தருமே ! ஆனந்தம் தருமே ! ஆறு தலையனின் வேலே ! (2) குருவேல் ! திருவேல் ! கதிர்வேல் ! வடிவேல் ! வெற்றிகள் சேர்த்திடும் பெருவேல் ! சூரனை மாய்க்கும்…தேவரைக் காக்கும்… வேலன் தாங்கும் அந்தத் திருவேல் ! (2) என்ன புண்ணியமோ மயிலே ! – எங்கள் கந்தன் திருவடிகள் தாங்க ! (2) ஓடிடுவாயே ! வேலனை ஏந்தி !அங்கும் இங்குமே நீயும் ! (2)
வாரான் ! வேலன் !

பாடலை பார்க்க/கேட்க‌<— முருகன் வருகிறான் ! ————————————- வாரான் ! வேலன் அந்த பழனிமலையில ! தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2) மொட்டை போட்ட கூட்டம் – பல‌ காவடிகள் ஆட்டம் ! எல்லாம் பாக்க வர்றான் ! (2) வாரான் ! வேலன் அந்த பழனிமலையில ! தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2) கோரஸ்: தைப்பூச நாயகா ! கந்த வேலய்யா ! சிவநேச பாலகா ! எங்க முருகய்யா ! தேனும் வாழைப்பழம் பேரீச்சைபழமும் சேர்த்து நெய்யுடனே பஞ்சா அம்ரிதமாய் (2) அண்டா எல்லாம் பொங்க ! – அத‌ அன்பா பக்தர்
வேலுண்டு !  பயம் இல்லை !

பாடலை பார்க்க/கேட்க‌<— வேலுண்டு ! மயிலும் உண்டு ! வேலோனின் துணையும் உண்டு ! ஏதும் பயம் இல்லையே ! எல்லாம் ஜெய மாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: கந்த வடிவேலனே ! செந்தில் குருநாதனே ! மதியுண்டு ! மனமும் உண்டு ! மதிபோன்ற முகமும் உண்டு ! முருகன் அருள் போதுமே ! கருணை மழை யாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: கந்த வடிவேலனே ! செந்தில் குருநாதனே !
பூசம் ! பூசம் ! தைப்பூசம்

பாடலை பார்க்க/கேட்க‌<— பூசம் ! பூசம் ! தைப்பூசம் பாக்க… போவோம் ! போவோம் ! பழனி மல! (2) பாதைரொம்ப தூரமில்ல பாருங்க ! ஒண்ணா செல்லுங்க ! வேல்-ன்னு சொல்லுங்க ! பக்க பலமா கந்தன்வருவான் பாருங்க ! (2) காவடியும் பாரமில்ல கேளுங்க ! இங்க பாருங்க ! கொஞ்சம் கேளுங்க ! – நாம ஆடிப்பாடி நடந்திடலாம் வாருங்க ! (2) காலை மாலை…கந்தனின் பேரே… நாளும் நாளும் சொல்லிடுவோம் ! (2) பாதையெல்லாம் திருப்புகழ பாடுவோம் ! சேர்ந்து பாடுவோம் ! தாளம் போடுவோம் ! – வரும் மேடு பள்ளம்