ஸ்ரீ துர்கா

ambal

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2) (அழகான கொலு) இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி கரம்… இல்லையென்று சொல்லாமல் அ ள்ளித்தரும் பல வரம் (2) அல்லல்களைத் தீர்த்திடும் அஷ்டலட்சுமி அவதாரம் (2) இஷ்டமுட ன் உனைவேண்ட கூடும் நலன் ஏராளம் (2) (அழகான கொலு ) குங்குமமும் மங்கலமும் தரும் மங்கலச்செல்வியே ! கலைமகள் வடிவாகி தந்திடுவாய் கல்வியே !(2) சிங்கத்திலே ஏறிடும் ஸ்ரீதுர்க்கை அன்னையே ! (2) தஞ்சமது
ஸ்ரீ துர்க்கா ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா கௌரி ! அம்மா ! ஜெய ஷ்யாம கௌரி ! ப்ரம்மா, விஷ்ணு, சிவனும் – ப்ரம்மா, விஷ்ணு சிவனும் வணங்கிடுவார் உனையே ! ஓம் ஜெய அம்பா கௌரி ! ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! – ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! சந்திர முகத் தோற்றம் ! ஓம் ஜெய அம்பா கௌரி ! பொன்நிற மேனியில் சூடுவாய் செந்நிற ஆடையினை…- நல்ல செந்நிற ஆடையினை… மின்னிடும் செம்பவள மாலை – மின்னிடும் செம்பவள மாலை மணிக் கழுத்தில் ஆடும்
சக்தி கொடு தாயே !

பாடலைக் கேட்க… சக்தி கொடு தாயே ! – சிவ‌ சக்தி தேவியே ! ருத்ரனுடல் பாதியாகி நின்ற தேவியே ! (2) அம்பிகையே ! சங்கரியே ! கௌரி மனோகரியே ! (சக்தி கொடு தாயே ! ) (உன்) ஆலயங்கள் படிகள் ஏற பாத சக்தி வேண்டும் ! – உன் கோலங்களை கண்டிடவே பார்வை சக்தி வேண்டும் ! (2) கரங்கள் தூக்கி உனை வணங்க கையில் சக்தி வேண்டும் ! (2) – உனை சிரம் பணிந்து தண்டனிட மெய்யில் சக்தி வேண்டும் ! (2) (சக்தி கொடு தாயே ! )
மஹிஷாசுரமர்த்தினி - தமிழ் பாடல் வடிவில்

ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, அவர்க்கு சமர்ப்பணமாகவோ, ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யராலோ இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.