நவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்

நவராத்திரி எட்டாம் நாள் - வித்யாலட்சுமி பாடல்
வித்யா லட்சுமி ———————- ஓம் புத்தி ரூபாய் வித்மஹே ! கலா ரூபாய் ச தீமஹே ! தன்னோ வித்யா ப்ரசோதயாத் ! ********************** பல்லவி ஞானம் என்னும் விளக்கேற்றி அஞ்ஞான இருளை நீக்கி… ஞாலம் எல்லாம் ஒளி தருவாள் மோன நிலைவாழ் வித்யா லட்சுமி ! ஞானம் என்னும் விளக்கேற்றி அஞ்ஞான இருளை நீக்கி… கலைகளின் ராணி மஹா சரஸ்வதி ! சரணம் சரணமே தேவி மலரடி ! (ஞானம் என்னும்) சரணம் – 1 அம்பிகைத் திருமுகம் சந்த்ரோதயம் ! – அவள் அறிவொளி வீசும் அருணோதயம் ! நம்பிக்கையாய் தொழும் அன்பருக்கு என்றுமே ! நவ நிதிகளுமே நல்கிடுவாளே வித்யா லட்சுமி ! கலைகளின் ராணி மஹா சரஸ்வதி ! சரணம் சரணமே தேவி மலரடி ! (ஞானம் என்னும்) சரணம் – 2 காவியம் பாடும் மாகவியாய் ! காளிதாசன் ஆனது அவளருளாலே ! காமாட்சி தாயாகி பிறவி ஊமை தன்னையே ! கவி பாடிடவே செய்தவள் அவள் வித்யா லட்சுமி ! கலைகளின் ராணி மஹா சரஸ்வதி ! சரணம் சரணமே தேவி மலரடி ! (ஞானம் என்னும்)