நவராத்திரி இரண்டாம் நாள் – தனலெட்சுமி பாடல்

தன லட்சுமி
——————–
ஓம் புஷ்டி ரூபாய் ச வித்மஹே !
ஸ்வர்ண தேவ்யை தீமஹி !
தன்னோ தன ப்ரசோதயத் !
*********************
பல்லவி
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தனமும் வளமும் தரும் தேவி நாராயணி ! (2)
தினம் தினம் உனைப் பாட செல்வம் சேரும் ! (2)
மனம் மகிழ் நலமெலாம் நாளும் கூடும் ! (2)
கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !
தன லட்சுமி ! ஆ…ஆ….ஆ…
சரணம் – 1
வைகுந்தம் அது நீங்கி, பூலோகம் வந்தாய் !
வைதேகி உன் சக்தி, திருமாலும் உணர… ! (2)
வேதம் போற்றிடும் திருமகளே ! (2)
வறுமையினை அழிப்பவளே !
வளமையினை சேர்ப்பவளே !
ஞாலம் போற்றும் ஞானம்
நிறைகுடமாய் கொண்டவளே ! (2)
சென்னிற ஆடை துளசியின் மாலை
சுந்தரி உனக்கு சார்த்திடுவோம் !
புண்ணிய ஸ்ரீதேவி ! – உனை
பூஜை செய்திடுவோம் ! (2)
(கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !)
சரணம் – 2
ஐஸ்வர்ய திருக்கோலம் நாம் போட்டுவைப்போம்!
சௌபாக்யம் எல்லாமும் நீசேர்க்க வேண்டும் ! (2)
கேட்ட வரம் தரும் ஸ்ரீநிதியே! (2)
திருச்செல்வ அதிபதியே !
கருணைமிகு குணவதியே !
தேவர் போற்றும் தேவி !
பத்மாசனி மாதவியே ! (2)
சென்னிற ஆடை துளசியின் மாலை
சுந்தரி உனக்கு சார்த்திடுவோம் !
புண்ணிய ஸ்ரீதேவி ! – உனை
பூஜை செய்திடுவோம் ! (2)
(கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி !)