வெங்கடரமணா ! கோவிந்தா !

Youtube-ல் கேட்க…
நம்பிக் கெட்டவர் எவரையா?
நாராயணனே கோவிந்தா ! (2)
வெம்பி வெதும்பி சலித்தாரும்
வெங்கடரமணா என்றவுடன்…
(நம்பிக் கெட்டவர் )
மலைமேல் கடலின் அலைபோலே
தெரியும் தலைகள் சாட்சியமே!
மலைபோல் குவியும் காணிக்கை…
காட்டும் பக்தர்கள் நம்பிக்கை !
(நம்பிக் கெட்டவர்)
அலர்மேல் மங்கை மணவாளா !
அருளும் எங்கள் குணசீலா !
சிலநாள் வாழ்வில் உன்நாமம்
சொல்லிடும் பேர்க்கும் வைகுந்தம் !
(நம்பிக் கெட்டவர் )