psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

சரவண பவனே !

🕉️


ராகம்: சல்லாப் (எ) சூர்யா

———————————————-

சரவண பவனே ! சிவன் திருமகனே !

வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை

நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்

கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !

(சரவண பவனே !)

துயில் நீக்கும் சேவல் உன் கொடியானது !

இருள் நீக்கும் ஒளி உந்தன் விழியானது !

துயில் நீக்கும் சேவல் உன் கொடியானது !

இருள் நீக்கும் ஒளி உந்தன் விழியானது !

மயிலேறி வலம்போகும் திரு வடியானது !

அருள் வார்க்கும் காருண்யம் உளமானது !

மயிலேறி வலம்போகும் திரு வடியானது !

அருள் வார்க்கும் காருண்யம் உளமானது !

(சரவண பவனே !)

பூந்தென்றல் கூத்தாடும் குன்றங்களே !

திருச் செந்தில் ஆண்டவன் மன்றங்களே !

பூந்தென்றல் கூத்தாடும் குன்றங்களே !

திருச் செந்தில் ஆண்டவன் மன்றங்களே !

வடிவேலன் அடிசேரும் அடியார்களே !

குடிகொண்டான் வடிவேலன் நம் நெஞ்சிலே !

வடிவேலன் அடிசேரும் அடியார்களே !

குடிகொண்டான் வடிவேலன் நம் நெஞ்சிலே !

(சரவண பவனே !)