வைகுண்ட ஏகாதசி – சிறப்பு பாடல்

வைகுண்ட ஏகாதசி - சிறப்பு பாடல்
பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி ! (2) ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – 1 —————– அரக்கனாம் முரனவனை அடக்கியே வதமுடித்த‌ அரங்கனின் பெண்ணுருவே ஏகாதசி ! (2) – அந்த‌ வெற்றியை முழங்கிடவே வைகுந்தம் திறந்ததென… பண்பாடி கொண்டாடுவோம் ! – புது பண்பாடி கொண்டாடுவோம் ! ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – 2 —————- புண்ணிய நாளிதனில் விரதம் பூணுவதால் ஜென்மத்து பாவங்களும் தீர்ந்திடுமே ! (2) – அந்த‌ நாரணன் திருவருளால் நலமெலாம் சேர்ந்திடுமே ! நல்வாழ்வு உண்டாகுமே ! – புது நல்வாழ்வு உண்டாகுமே !