காவடியை தூக்கி ஆடுவோம்

பாடலை பார்க்க/கேட்க‌<—

காவடியை தூக்கி ஆடுவோம் ! -வேண்டிக்கொண்டுநாம்
வேலவனின் காலடியை நாடிச் செல்லுவோம்! (2)
சின்ன சின்ன காவடி ! வண்ண வண்ண காவடி !
சிங்கார வேலன் காவடி ! (2)
குன் றெல்லாம் நின் றாடும் நம்ம குமரனுக்கு
கும்மாளம் கொண்டாட்டம் தரும் காவடியே ! (2)

கோரஸ்:
வெற்றிவேல் வேல் வேல் ! வேல்முருகா !
வீரவேல் வேல் வேல் ! வேல்முருகா ! (2)

அங்குமிங்கும் எங்கும் காவடி ! – அழகுவேலனின்
மலையச் சுத்தி கூத்தாடும் முத்துக் காவடி ! (2)
ஆட்டம் ஆடும் காவடி ! ஆண்டியப்பன் காவடி !
ஆறுமுகச் சாமி காவடி ! (2)
முன்னாலும் பின்னாலும் வரும் காவடியே !
திக் கெட்டும் ஒன்னாகி வரும் காவடியே

கோரஸ்:
வெற்றிவேல் வேல் வேல் ! வேல்முருகா !
வீரவேல் வேல் வேல் ! வேல்முருகா ! (2)

பச்சை மயில் ஆடும் காவடி ! – பழனிமுருகன்
பெருமைபாடும் பூவான புஷ்ப காவடி ! (2)
பால் பழக் காவடி ! பஞ்சாமிர்தக் காவடி !
பாலனுக்கு பன்னீர் காவடி ! (2)
நம் மன்னன் நம் கந்தன் அவன் மனம்விரும்பும்…
புது வண்ணம் அதில்மின்னும்பல காவடியே !

கோரஸ்:
வெற்றிவேல் வேல் வேல் ! வேல்முருகா !
வீரவேல் வேல் வேல் ! வேல்முருகா ! (2)

சந்தனத்தில் வாசக் காவடி ! – சண்முகனுக்கு
குளுமை தர இளநீரு தீர்த்த காவடி ! (2)
சக்தி வேலின் காவடி ! சக்தி தரும் காவடி !
சரவணன் மச்சக் காவடி ! (2)
தன்னானே ! தன்னானே ! என சந்தம்சொல்லியே…
பண் பாடி…கொண் டாடிவரும் காவடியே !

கோரஸ்:
வெற்றிவேல் வேல் வேல் ! வேல்முருகா !
வீரவேல் வேல் வேல் ! வேல்முருகா ! (2)

சீறிவரும் சர்ப்பக் காவடி ! – சிவன்மகனுக்கு
மனம்விரும்பும் சீரான மஞ்சக் காவடி ! (2)
அக்கினியில் காவடி ! அலங்காரக் காவடி !
அன்பனுக்கு அன்னக் காவடி ! (2)
தைப் பூசம்..! மலை வாசல் வரும் காவடியே !
எந் நாளும்…தந்தாளும் குகன் சேவடியே !

கோரஸ்:
வெற்றிவேல் வேல் வேல் ! வேல்முருகா !
வீரவேல் வேல் வேல் ! வேல்முருகா ! (2)