psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

எங்க ரங்கநாதனடி

🕉️


“வள்ளிக் கணவன் பேரை” – பாடலின் மெட்டில் பாடலாம் (ராகம்: செஞ்சுருட்டி) உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே ! உள்ளக்குறை சொல்லப்போனா உள்ளத்தையே கள்ளஞ்செய்வான்…! பள்ளிகொண்ட மாலனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே ! கண்ணின்விழி வண்ணனடி ! வெள்ளைமனக் கண்ணனடி ! அன்பின் அடையாளமடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே ! கோதைக் கணவனடி ! கோகுலக் கிருஷணனடி ! கீதை சொன்னவனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே ! ஆயிரம் பேரனடி ! காவிரி தீரனடி ! தாயுளம் ஆனவண்டி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே ! 2) வந்தவரைக் காக்கும் அடி… வாழ்வில் நலம் சேர்க்கும் அடி… எந்தன் சிரம் தாழும்அடி கிளியே ! அந்த ரங்கநாதன் அடி..கிளியே ! பாசுரங்கள் பாடும் அடி… பாம்பலையில் ஆடும் அடி… நேசன்நா ரணன் அடி கிளியே ! நம்ம ரங்கநாதன் அடி..கிளியே ! வாமனனாய் வந்ததடி.. வானளந்து நின்றதடி..! நாமம்கோ விந்தனடி கிளியே ! நம்ம ரங்கநாதன் அடி..கிளியே ! அசுரரை அடக்கும் அடி ! தேவரைக் காக்கும் அடி ! பசுக்களை மேய்த்ததடி…கிளியே ! நம்ம ரங்கநாதன் அடி..கிளியே ! திருமகள் போற்றும் அடி… திருவருள் கூட்டும் அடி… திருமால் மலரடி…கிளியே ! ஸ்ரீ ரங்கநாதன் அடி…கிளியே! Visit Video in my Facebook Page